Advertisement

வரும் செப்டம்பர் மாதம் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா

By: Nagaraj Thu, 20 July 2023 08:53:08 AM

வரும் செப்டம்பர் மாதம் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா

சென்னை: வரும் செப்டம்பர் மாதத்தில் லியோ இசைவெளியீட்டு விழா நடைபெறும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். டிரைலரும் அதே தேதியில் வெளியாகவே அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

leo,music launch,director lokesh,trailer,info ,லியோ, இசை வெளியீட்டு விழா, இயக்குனர் லோகேஷ், டிரைலர், தகவல்

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில் இருக்கிறது.

இந்நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ், வருகிற செப்டம்பர் மாதத்தில் லியோ இசைவெளியீட்டு விழா நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். டிரைலரும் அதே தேதியில் வெளியாகவே அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|