Advertisement

வசூல் மழையில் ‘விடுதலை’

By: vaithegi Mon, 10 Apr 2023 11:22:14 AM

வசூல் மழையில் ‘விடுதலை’

கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

இத்திரைபடத்தில் கெளதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி கொண்டு வருகிறார்கள்.

liberation,collection ,விடுதலை,வசூல்

இதனை அடுத்து படம் வெளியாகி 1 வாரங்கள் கடந்தும் பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்நிலையில் படம் தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, விடுதலை திரைப்படம் உலகம் முழுவதும் 38 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :