- வீடு›
- பொழுதுபோக்கு›
- தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக விடுதலை இருக்கும்
தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக விடுதலை இருக்கும்
By: Nagaraj Sat, 11 Mar 2023 11:48:40 PM
சென்னை: விடுதலை தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும் என்று தனது நண்பர்களிடம் அமீர் கூறி வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய விடுதலைப் படத்தின் வெளியீடு மார்ச் இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. முதலில் இப்படத்தை குறுகிய காலத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் விஜய் சேதுபதி படத்தில் இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகரித்து பல நட்சத்திரங்கள் நடித்தனர். இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் முடிவடைந்துள்ளது.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. இப்படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் படத்தின் இரண்டு பாகங்களை தனது நண்பரான இயக்குனர் அமீரிடம் காட்டியுள்ளார்.
படத்தை பார்த்து பிரமிப்பில் இருந்த அமீர், “விடுதலை தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும்” என்று தனது நண்பர்களிடம் கூறி வருகிறார்.