Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அப்போ நடந்தது போல் இப்போதும் நடக்கும்... ஒப்பீடும் செய்யும் விஜய் ரசிகர்கள்

அப்போ நடந்தது போல் இப்போதும் நடக்கும்... ஒப்பீடும் செய்யும் விஜய் ரசிகர்கள்

By: Nagaraj Sun, 13 Nov 2022 9:47:02 PM

அப்போ நடந்தது போல் இப்போதும் நடக்கும்... ஒப்பீடும் செய்யும் விஜய் ரசிகர்கள்

சென்னை: சுறா படத்தின் தோல்வியில் பல விமர்சனங்களை பெற்ற விஜய் அடுத்த இரண்டே வருடத்தில் பிரமாண்ட வசூலை கொடுத்து கோலிவுட்டையே அசர வைத்தார் என்பதை நினைவுப்படுத்துவோம். அதுபோல்தான் இப்போதும் பீஸ்ட் தோல்விக்கு பதிலடியாக செம வசூலை ஈட்டும் வாரிசு என்று ரசிகர்கள் ஒப்பீடு செய்து வருகின்றனர்.


தற்போது தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கும் இப்படம் வருகிற 202ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு முன்பு வெளியான பீஸ்ட் செம தோல்வி அடைந்தது. விஜய் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தார். இதற்கு முன்பும் இதேபோல் விமர்சனங்களை விஜய் சந்தித்துள்ளார்.


விஜய் நடிப்பில் 50வது திரைப்படமாக சுறா வெளிவந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து இப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இதுவரை இப்படியொரு தோல்வியை தன்னுடைய திரைவாழ்க்கையில் விஜய் பார்த்ததே இல்லை. இப்படம் சுமார் ரூ. 10 கோடி நஷ்டத்தை சந்தித்தது.

vijay,kollywood,shark,gun,collection,big hit ,விஜய், கோலிவுட், சுறா, துப்பாக்கி, வசூல், மாபெரும் வெற்றி

2010ஆம் ஆண்டு வெளிவந்த சுறா படத்தின் தோல்வியின் மூலம் பல கடுமையான விமர்சனங்களை சந்தித்த விஜய், அடுத்த இரண்டே ஆண்டுகளில் துப்பாக்கி எனும் மாபெரும் வெற்றி படத்தின் மூலம் யாரும் எதிர்பார்க்காத கம் பேக் கொடுத்தார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இப்படம் ரூ. 120 கோடி வசூலை தொட்டது. அதுவே விஜய்யின் திரை வாழ்க்கையில் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது வாரிசு படமும் செம வசூல் செய்யும் என்று கோலிவுட் வாசிகள் தெரிவித்து வருகின்றனர். விஜய் ரசிகர்களும் இதை ஒப்பீடு செய்து வருகின்றனர். காரணம் வாரிசு படம் இப்போதே செம வியாபாரம் ஆகி உள்ளது என்று வெளியாகும் தகவல்கள்தான்.

Tags :
|
|
|