Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சூர்யாவையும் பிடிக்கும்... அடுத்த பேட்டியில் விஜய்யையும் பிடிக்குமாம்!!!

சூர்யாவையும் பிடிக்கும்... அடுத்த பேட்டியில் விஜய்யையும் பிடிக்குமாம்!!!

By: Nagaraj Sat, 20 Aug 2022 10:48:22 PM

சூர்யாவையும் பிடிக்கும்... அடுத்த பேட்டியில் விஜய்யையும் பிடிக்குமாம்!!!

சென்னை: செம பொண்ணும்மா நீ... பொழைச்சுக்கவ என்று கோலிவுட்வாசிகள் அதிதி ஷங்கரின் பேட்டிகளை கண்டு வியந்துதான் போய் உள்ளனர்.

விருமன் படத்தில் அறிமுகம் ஆகியுள்ள அதிதி ஷங்கர் அதையடுத்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடிக்கிறார்.
மேலும் விருமனில் கிராமத்து பெண்ணாக நடித்தவர், மாவீரன் படத்தில் மாடர்ன் ரோலில் நடிக்கப் போகிறார். இந்த நிலையில் தொடர்ந்து மீடியாக்களுக்கு பேட்டி அளித்து வரும் அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவில் சூர்யா, சமந்தா ஆகிய இருவரும் எனக்கு மிகவும் பிடித்த கலைஞர்கள் .

vijay,suriya,nenamathuar,aditi shankar,kollywoodites ,விஜய், சூர்யா, நடனமாடுவார், அதிதி ஷங்கர், கோலிவுட்வாசிகள்

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த படத்தில் அறிமுகமான நான் விரைவில் அவருடனும் நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

அதையடுத்து அவர் அளித்துள்ள இன்னொரு பேட்டியில், விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி இருப்பவர், அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் . முக்கியமாக அவர் மிகச் சிறப்பாக நடனமாடுவார். அதனால் அவருடன் சேர்ந்து நடனம் ஆட வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார் அதிதி ஷங்கர்.

Tags :
|
|