Advertisement

லியோ படத்தின் தலைப்பை போல் அஜித் படத்திற்கு டெவில் என பெயர்?

By: Nagaraj Fri, 24 Feb 2023 6:53:07 PM

லியோ படத்தின் தலைப்பை போல் அஜித் படத்திற்கு டெவில் என பெயர்?

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்திற்கு போட்டியாக நடிகர் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தின் தலைப்பை டெவில் என்று வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்ததால், படப்பிடிப்பு தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இப்படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்கத்தில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் படக்குழு மவுனம் காத்து வருகிறது.

ஏகே 62 படத்தின் அப்டேட் வெளியானாலும், படத்தின் ஆரம்பகட்ட பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பூஜை கூட கடந்த சில தினங்களுக்கு முன் போடப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு அனிருது இசையமைக்க உள்ளதாகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இப்படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

vijay movie,leo,english,title,exam,web ,விஜய் படம், லியோ, ஆங்கிலம், டைட்டில், தேர்வு, இணையம்

ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தான் வெளியிட உள்ளார்களாம். அந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த வாரமே ஷூட்டிங்கையும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏகே 62 படத்தின் அறிவிப்பு விஜய்யின் லியோ படத்தை போன்று டைட்டிலோடு தான் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த மூன்று டைட்டில்களை தேர்வு செய்து வைத்துள்ளாராம் இயக்குனர் மகிழ் திருமேனி. அதில் ஒன்று தான் இறுதி செய்யப்பட்டு வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் ஏகே 62 படத்தின் டைட்டில் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி இப்படத்துக்கு டெவில் என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே விஜய் படத்துக்கு லியோ என ஆங்கிலத்தில் பெயரிட்டுள்ளதால், ஏகே 62 படக்குழுவும் அதே பாணியில் பெயரிட திட்டமிட்டு இந்த டைட்டிலை தேர்வு செய்து உள்ளார்களாம்.

Tags :
|
|
|