Advertisement

ஹீரோ அவதாரம் எடுக்க இருக்கும் லோகேஷ் -அனிருத்

By: vaithegi Fri, 14 Apr 2023 3:36:54 PM

ஹீரோ அவதாரம் எடுக்க இருக்கும் லோகேஷ் -அனிருத்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் திரைப்படம் ஒன்றில் நடிகர்களாக நடிக்கவுள்ளதாக கோலிவுட் சினிமாவட்டாரத்தில் புதிய தகவல் பரவி கொண்டு வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இத்திரைப்படத்தை பிரபல சண்டை பயிற்சி இயக்குனர்களான இரட்டையர்கள் அன்பு அறிவு இயக்கவுள்ளார்களாம்.

ஏற்கனவே, அன்பு அறிவு இருவரும் ராகவலரன்ஸை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவிருந்தார்கள். அதற்கு பிறகு சில காரணங்களால் அப்படத்தை இயக்கமுடியாமல் போய்விட்டது. எனவே, தற்போது மீண்டும் இருவரும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

lokesh,anirudh,hero ,லோகேஷ் ,அனிருத்,ஹீரோ

அன்பு அறிவு இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் நடிக்கவுள்ள படத்தின் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் சக நடிகரான சமுத்திரக்கனி டிவிட்டரில் அவர்களுடைய புகைப்படங்களை வெளியீட்டு “வாழ்த்துக்கள் செல்லங்களே….வெல்வோம்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் இது உறுதியாகியுள்ளது.

மேலும் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் லியோ திரைப்படதை இயக்கி கொண்டு வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். படத்தில் ஸ்டன்ட் காட்சி இயக்குனர்களாக அன்பு அறிவு தான் பணியாற்றி வருகிறார்கள்.

Tags :
|