Advertisement

ரஜினியின் அடுத்த படத்தை லோகேஷ் இயக்கப் போவது கிட்டத்தட்ட உறுதி

By: Nagaraj Wed, 12 Apr 2023 11:08:15 PM

ரஜினியின் அடுத்த படத்தை லோகேஷ் இயக்கப் போவது கிட்டத்தட்ட உறுதி

சென்னை: ரஜினியின் அடுத்த படத்தை லோகேஷ் இயக்கப் போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் இது ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

விக்ரம் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனர். படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்குவதற்காக படக்குழுவினர் சில நாட்களுக்கு முன்பு காஷ்மீர் சென்றுள்ளனர்.

மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் படக்குழுவினர் அங்கேயே தங்கி தற்போது படப்பிடிப்பை முடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

competetion,film,movie, ,போட்டி, ரஜினி, லோகேஷ்

இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை லோகேஷ் இயக்கப் போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் இது ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மாஸ்டர் மற்றும் லியோ படங்களின் தயாரிப்பாளரான லலித் குமார் இந்த படத்தை தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சன் பிக்சர்ஸ், தில் ராஜு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், ஹோம்பல்லே பிலிம்ஸ் நிறுவனங்களும் லோகேஷை நச்சரித்து வருகின்றன. இதனால் லோகேஷ் சம்பளம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Tags :
|
|