Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கமலஹாசன் 232வது படம் குறித்த ரசிகர்கரின் வீடியோவை ரசித்த லோகேஷ் கனகராஜ்!

கமலஹாசன் 232வது படம் குறித்த ரசிகர்கரின் வீடியோவை ரசித்த லோகேஷ் கனகராஜ்!

By: Monisha Wed, 23 Sept 2020 12:34:17 PM

கமலஹாசன் 232வது படம் குறித்த ரசிகர்கரின் வீடியோவை ரசித்த லோகேஷ் கனகராஜ்!

கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் கமலஹாசன் 232வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அனிருத் இசையில் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'கமல்ஹாசன் 232' படத்தின் மாஸ் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அதற்கு இணையாக அல்லது அதற்கு மேலும் ரசிகர்களின் ஃபேன்மேட் போஸ்டர்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

kamal haasan,fan,video,lokesh kanagaraj ,கமலஹாசன்,ரசிகர்,வீடியோ,லோகேஷ் கனகராஜ்

படக்குழுவினர்கள் வெளியிடுவது போலவே உள்ள ஃபேன்மேட் போஸ்டர்கள், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை படக்குழுவினர்களே ரசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் 'கமல்ஹாசன் 232' படம் குறித்து வெளியிட்ட ஃபேன்மேட் வீடியோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஸ்வரூபம் படத்தின் பாடலான 'யார் என்று தெரிகிறதா' என்ற பாடலின் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Tags :
|
|