Advertisement

கமல்ஹாசனுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்!

By: Monisha Thu, 17 Sept 2020 10:32:14 AM

கமல்ஹாசனுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு நேற்று மாலை வெளியாகியுள்ளது. கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து கமல்ஹாசனை இயக்குகிறார். கமல்ஹாசன் நடிக்கும் 232 படத்திற்கு "எவனென்று நினைத்தாய்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை முடித்து விட்டார். அதனை தொடர்ந்து அவர் யாருடன் கூட்டணி சேர இருக்கிறார் என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருந்தது. ரஜினி மற்றும் கமல் ஆகியோருடன் தனது அடுத்த படத்திற்காக லோகேஷ் கூட்டணி சேர உள்ளார் என சில மாதங்களாகவே கூறப்பட்டு வரும் நிலையில், அது பற்றிய எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.

lokesh kanagaraj,kamal haasan,rajkamal films international,cinema ,லோகேஷ் கனகராஜ்,கமல்ஹாசன்,ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்,சினிமா

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை லோகேஷ் கனகராஜ் பதிவிட்டிருந்த ட்விட்டில் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்திருந்தார். நேற்று மாலை 6 மணிக்கு அது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் 232 படத்திற்கு "எவனென்று நினைத்தாய்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

Tags :