Advertisement

லோகேஷ், ரஜினியின் 171 படத்தின் சுவாரஸ்யமான அப்டேட் பகிர்வு

By: vaithegi Sun, 15 Oct 2023 11:00:47 AM

லோகேஷ், ரஜினியின்  171 படத்தின் சுவாரஸ்யமான அப்டேட் பகிர்வு

ரஜினி நடிக்கவுள்ள 171-வது படத்திற்கான அறிவிப்பும் வெளியாகி விட்டது. தற்காலிகமாக “தலைவர் 171” எனும் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் அத்திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

இதையடுத்து இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அன்பறிவு சண்டை மாஸ்டராக பணி புரிய உள்ளதாக சொல்லப்படுகிறது.

update,lokesh,rajini ,அப்டேட் ,லோகேஷ், ரஜினி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் ‘லியோ’ படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகிறது, இதைத் தொடர்ந்து இயக்குனர் தனது அடுத்த படமான ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தை இயக்கவுள்ளார்.

இந்த நிலையில், லியோ ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் லோகேஷ், ரஜினியின் 171 படத்தின் சுவாரஸ்யமான அப்டேட்டை பகிர்ந்து கொண்டார். அதவாது, முன்னதாக, ‘தலைவர் 171’ திரைப்படம் LCU-ல் வருவதாக நிறைய தகவல்கள் இணையத்தில் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில், தலைவர் 171 படம் LCU இல்லாத தனித்துவமான படம் தான் என அவர் கூறியுள்ளார்.


Tags :
|
|