Advertisement

விஜய் நடிக்கும் லியோ படத்திற்காக லோகேஷிற்கு ரூ.25 கோடி சம்பளமாம்!

By: Nagaraj Fri, 10 Feb 2023 05:10:38 AM

விஜய் நடிக்கும் லியோ படத்திற்காக லோகேஷிற்கு ரூ.25 கோடி சம்பளமாம்!

சென்னை: லோகேஷ் கனகராஜிற்கு விஜய் நடிக்கும் லியோ படத்திற்காக எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளது.

விஜய் ஒரு படத்தை முடித்த கையோடு எப்போதும் இன்னொரு படத்தை தொடங்கிவிடுவார். அப்படிதான் தான் வாரிசு படத்தை முடித்த கையோடு தனது 67வது பட வேலைகளை தொடங்கி இருக்கிறார்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ள இப்படத்திற்கு படக்குழு லியோ என பெயர் வைத்துள்ளனர்.

lokesh,thalapathy 67,shooting,salary,info,fans ,லோகேஷ், தளபதி 67, படப்பிடிப்பு, சம்பளம், தகவல், ரசிகர்கள்

தற்போது ராஜஸ்தானில் அதிக குளிருக்கு நடுவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது, படக்குழு மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது லோகேஷ் கனகராஜிற்கு லியோ படத்திற்காக எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் விஜய்யின் லியோ படத்திற்காக அவருக்கு ரூ. 20 முதல் ரூ. 25 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். விக்ரம் படத்திற்காக லோகேஷ் ரூ. 12 கோடி வரை சம்பளம் பெற்றார் என்றும் தெரிவிக்கின்றனர்.

Tags :
|
|
|