- வீடு›
- பொழுதுபோக்கு›
- லியோ படத்தின் லோகிவர்ஸ் தீம் இசை வீடியோ வெளியீடு
லியோ படத்தின் லோகிவர்ஸ் தீம் இசை வீடியோ வெளியீடு
By: Nagaraj Sat, 28 Oct 2023 5:11:03 PM
சென்னை: லியோ படத்தில் இடம்பெற்ற லோகிவர்ஸ் 2.0 தீம் இசையின் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது. தற்போது, இது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் உலகம் முழுவதும் 6,000 திரைகளில் வெளியானது. இதுவரை வெளியான தமிழ்ப்படங்களிலேயே அதி வேகமான வசூல் லியோதான் என்கிற அளவிற்கு உலகம் முழுவதும் இப்படம் வருவாயை ஈட்டி வருகிறது.
இப்படம் 7 நாள்களில் ரூ.461 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிகமான வசூலித்த படங்களில் லியோ முதலிடத்தில் இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற லோகிவர்ஸ் 2.0 தீம் இசையின் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது. தற்போது, இது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.