Advertisement

நடிகை சாய் பல்லவி நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ படப்பிடிப்பு தொடக்கம்

By: Nagaraj Tue, 08 Sept 2020 8:46:41 PM

நடிகை சாய் பல்லவி நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ படப்பிடிப்பு தொடக்கம்

நடிகை சாய் பல்லவி அடுத்ததாக நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

மனதில் நிற்கும்படியான வேடங்களில் நடிப்பவர் சாய் பல்லவி. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட மலர் டீச்சர் முதல், துறு துறுப் பெண்ணாக நடித்த பானுமதி வரை, அனைத்திலுமே அவரது இயல்பான நடிப்பும், அழகிய முக பாவங்களும் நம்மை கவர்ந்திருக்கும்.

அவர் தற்போது ‘லவ் ஸ்டோரி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஊரடங்கால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு, நேற்று மறுபடியும் தொடங்கியுள்ளது.

filming started,saipallavi,hyderabad ,படப்பிடிப்பு, ஐதராபாத், சாய்பல்லவி, தொடங்கியது

இந்தப் படத்தில், சாய் பல்லவிக்கு ஜோடியாக நாக சைதன்யா நடிக்கிறார். இதற்கு முன் சாய் பல்லவியை Fidaa (பானுமதி என்று தமிழில் வெளியானது) என்ற படத்தில் இயக்கிய சேகர் கம்முலா இந்தப் படத்தையும் இயக்குகிறார். வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

ஐதராபாத் -ல் நேற்று 15 பேருடன் தொடங்கிய படப்பிடிப்பு. ஒரே கட்டமாக நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :