- வீடு›
- பொழுதுபோக்கு›
- துணிவு படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது லைகா நிறுவனம்
துணிவு படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது லைகா நிறுவனம்
By: Nagaraj Sat, 19 Nov 2022 6:35:56 PM
சென்னை: நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாகும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மைக் கதையில் அஜித் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர்,
ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழக
வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்
கைப்பற்றியுள்ளது. படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில்
இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ‘துணிவு’ படத்தின்
வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கான
போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.