Advertisement

நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மாதவன் மகன்..

By: Monisha Mon, 18 July 2022 8:20:45 PM

நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மாதவன் மகன்..

சினிமாவில் அறிமுகமான புதிதில் தொடர்ந்து ரொமாண்டிக் படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்தவர் மாதவன். இவர் சமீபத்தில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.அதன்படி இவர் ராக்கெட்ரி என்கிற படத்தை இயக்கி வெளியிட்டார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் மாதவன்.

ராக்கெட்ரி படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் மாதவன், தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்துள்ளார். அதன்படி நடிகர் மாதவனின் மகன் வேதந்த், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளாராம். 1500 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் கலந்துகொண்ட வேதந்த் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

swim,competition,record,son ,நீச்சல் ,போட்டி,சாதனை,மகன்,

மகன் நீச்சல் போட்டியில் சாதனை படைத்தபோது எடுத்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் மாதவன்.நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மாதவனின் மகன் வேதந்த்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Tags :
|
|