Advertisement

பிக்பாஸ்-6 ல் மதுரை முத்து? பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்

By: Nagaraj Wed, 21 Sept 2022 10:01:55 PM

பிக்பாஸ்-6 ல் மதுரை முத்து? பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்

சென்னை: பிக்பாஸ்- 6 நிகழ்ச்சியில் மதுரை முத்து பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


நகைச்சுவை பேச்சாளராக தனது பயணத்தை தொடங்கிய மதுரை முத்து கலக்கப் போவது யாரு', 'அசத்தப் போவது யாரு', 'காமெடி ஜங்சன்' போன்ற டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார். நீண்ட ஆண்டுகளாக சன் டிவியில் இருந்தவர் பின்பு விஜய் டிவி பக்கம் சென்றார். இவர் வெறும் நகைச்சுவை பேச்சாளர் மட்டுமில்லை . பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.

வெள்ளித்திரையில் 'மதுரை வீரன், 'குற்றம் குற்றமே' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். முத்துவின் பர்சனல் பக்கம் பற்றி எல்லோருக்கும் தெரியும். இவரின் முதல் மனைவி கார் விபத்தில் இறந்து விட்டார். பின்பு மகளுக்காக முத்து இண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். இதை பற்றி பலமுறை மிகவும் எமோஷனலாக முத்து டிவி நிகழ்ச்சியில் ஷேர் செய்து இருக்கிறார்.

madurai muthu,internet,information,bigg boss-6,negotiation,compulsory ,மதுரை முத்து, இணையம், தகவல், பிக்பாஸ் -6, பேச்சுவார்த்தை, கட்டாயம்

தற்போது ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் மதுரை முத்து கலக்கி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் முத்து நடுவராக இருந்தார். இவரின் ஜோக்குகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் விரைவில் தொடங்கவுள்ள பிக் பாஸ் சீசன் 6ல் மதுரை முத்து கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன. விஜய் டிவியில் இருப்பவர்களுக்கு பிக் பாஸில் கட்டாயம் முன்னுரிமை கொடுக்கப்படும் அந்த வரிசையில் மதுரை முத்து இந்த முறை பிக் பாஸ் சீசன் 6 ல் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தை சேனல் தரப்பில் நடந்து வருவதாகவும் செய்திகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Tags :