Advertisement

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர் மகேஸ்வரி

By: Nagaraj Sun, 13 Nov 2022 9:47:12 PM

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர் மகேஸ்வரி

சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் தொடர்ந்து குழப்பத்தில் இருந்த நிலையில் அதற்கான பதில் கிடைத்துவிட்டது. விஜே மகேஸ்வரிதான் அவர் என்று தெரிய வந்துள்ளது. அவருக்கு குறைவான வாக்குகள் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

எதிலுமே ஈடுபாடு காட்டாமல் இருக்கும் ராம் தான் எலிமினேட் ஆவர் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர் . ஆனால் தற்போது எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் நடைபெற்று இருக்கிறது.

bigg boss,exited,maheshwari,kamal,this week ,பிக்பாஸ், வெளியேறினார், மகேஸ்வரி, கமல், இந்த வாரம்

VJ மஹேஸ்வரி தான் சற்றுமுன் கமல்ஹாசனால் வெளியேற்றப்பட்டு இருக்கிறது. அவர் டேஞ்சர் சோனில் இருந்தார் என்றாலும் எலிமினேஷனில் இந்த ட்விஸ்ட் எப்போதும் பிக் பாஸில் நடப்பது தானே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


இதனால் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் சோகம் அடைந்துள்ளனர். இருப்பினும் மகேஸ்வரிக்கு மக்கள் குறைவான ஓட்டுக்கள்தான் பதிவாகி இருந்ததாம். அதனால்தான் அவர் வெளியேற்றப்பட்டார் என்று இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இதற்கான ப்ரோமோ செம வைரலாகி உள்ளது.

Tags :
|
|