- வீடு›
- பொழுதுபோக்கு›
- செம கோபமடைந்த மைனா நந்தினி கணவர்... மன்னிப்பு கேட்ட யூடியூப் சேனல்
செம கோபமடைந்த மைனா நந்தினி கணவர்... மன்னிப்பு கேட்ட யூடியூப் சேனல்
By: Nagaraj Fri, 16 Dec 2022 09:06:46 AM
சென்னை: இப்படி எல்லாம் செய்வது சரிதானா?... மைனா நந்தினியை உருவக்கேலி செய்த யூடியூப் குறித்து அவரது கணவர் வேதனை தெரிவித்தார். இதையடுத்து அந்த யூடியூப் சேனல் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
பிக்பாஸ் வருவதற்கு முன்னரே மைனா நந்தினி பிரபலமானவர் தான், பல படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்திருக்கிறார். சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் இவர் மைனா என்று அழைக்கப்படுகிறார். இந்நிகழ்ச்சியில் நந்தினி மீது ரசிகர்கள் பலருக்கும் வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இவர் க்ரூப்பிசம் செய்வதாக கூறப்பட்டது பின்னர் இவர் பிறரை பற்றி புறம் பேசுவது போன்ற செயல்கள் மக்களுக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் நந்தினி அணிந்திருந்த டயாப்பர் பற்றி யூடியூப் சேனல் மோசமான கருத்தை பதிவு செய்தது.
அவரை உருவக்கேலி செய்துள்ளனர். இதையடுத்து மைனாவின் கணவர் யோகேஷ்வரன், அந்த யூடியூப் சேனலுக்கு ஒரு செகண்ட்ல ஸ்ட்ரைக் கொடுத்திருப்பேன். அந்த அளவுக்கு கோபம் வந்துடுச்சு.. எப்படி ஒரு பெண்ணை பற்றி அப்படி மோசமாக பேசலாம் என வருத்தம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்த யூடியூப் சேனல் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.