- வீடு›
- பொழுதுபோக்கு›
- மாளவிகாவின் புத்தகம் படிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல்!
மாளவிகாவின் புத்தகம் படிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல்!
By: Monisha Sat, 18 July 2020 5:58:28 PM
நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் இந்த கொரோனா விடுமுறையில் அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது தனது படுக்கை அறையில் உட்கார்ந்து புத்தகம் படிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் தன்னுடைய தனக்குப் பின்னால் இருக்கும் பெண்ணின் பெயிண்டிங்கை கவனியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மாளவிகாவின் ரசிகர்கள் அந்த பெயிண்டிங்கை கவனிக்காமல் அவரைப் பற்றியே கமெண்ட்டில் வர்ணனை செய்து வருகின்றனர். மாளவிகாவின் இந்த புத்தகம் படிக்கும் கிளாமர் போஸ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
'மாஸ்டர்' படத்தின் ரிலீசுக்கு பின் கோலிவுட்டில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் ஒரு ரவுண்ட் வருவார் மாளவிகா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாலிவுட்டில் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த படத்தில் அவருக்கு நயன்தாராவை விட அதிக சம்பளம் என்றும் கூறப்படுகிறது.