Advertisement

பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம்!

By: Monisha Thu, 25 June 2020 12:44:10 PM

பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்திற்கு பின்பு அவருக்கு ஜாக்பாட் அடித்தது. முன்னணி நடிகைகள் பலர் இருக்கும் நிலையில் அவர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நாயகி ஆக அறிமுகமானார். இந்த படம் வெளியாகும் முன்னரே அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. வரும் வாய்ப்புகளை சரியாக தேர்வு செய்து மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மறைந்த பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ என்ற படத்தை இயக்கிய ரவி உத்யவார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் தான் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

bollywood,malavika mohanan,master movie,cinema ,பாலிவுட்,மாளவிகா மோகனன்,மாஸ்டர் படம்,சினிமா

இந்த படத்தில் அவர் ஆக்ஷன் நாயகியாக நடிப்பதாகவும் இந்த படத்தில் அவருக்கு ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதாகவும் இதற்காக மாளவிகா மோகனன், மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. சித்தாந்த் சதுர்வேதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யுடன் மாளவிகா மோகனன் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :