Advertisement

அதிரடி ஆக்ஷன் வெப்சீரிஸ் மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக தகவல்!

By: Monisha Fri, 06 Nov 2020 5:05:41 PM

அதிரடி ஆக்ஷன் வெப்சீரிஸ் மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து இருந்தாலும் மாளவிகா மோகனனுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கித் தந்தது தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் தான். இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் அவருக்கு தமிழ் உள்பட தென்னிந்திய திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள திரைப்படத்தில் மாளவிகா மோகனன் தான் நாயகி என்று சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடிக்க இருக்கும் வெப்தொடர் ஒன்றிலும் நாயகி மாளவிகா மோகனன் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

malvika mohanan,web series,shakit kapoor,filming,bollywood ,மாளவிகா மோகனன்,வெப்சீரிஸ்,ஷாகித் கபூர்,படப்பிடிப்பு,பாலிவுட்

அமேசான் பிரைம் தயாரிக்கும் இந்த தொடர் அதிரடி ஆக்ஷன் வெப்சீரிஸ் என்றும் இந்த தொடரில் முக்கிய கேரக்டரில் மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே மாளவிகா மோகனன் பாலிவுட்டில் ஒரு ஆக்சன் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படது. 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே அவர் பல திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களில் நடிக்க கமிட் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :