Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மலையாள நடிகர் சங்கம் பேச்சுவார்த்தை: நடிகர் ஷேன்நிகம் மீதான தடை நீக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்புதல்

மலையாள நடிகர் சங்கம் பேச்சுவார்த்தை: நடிகர் ஷேன்நிகம் மீதான தடை நீக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்புதல்

By: Nagaraj Tue, 27 June 2023 11:32:13 PM

மலையாள நடிகர் சங்கம் பேச்சுவார்த்தை: நடிகர் ஷேன்நிகம் மீதான தடை நீக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்புதல்

கேரளா: தயாரிப்பாளர் சங்கத்துடன், மலையாள நடிகர் சங்கம் இந்த பிரச்சினை குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து ஷேன் நிகம் மீதான தடையை நீக்க தயாரிப்பாளர் சங்கம் முன் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஷேன் நிகாமும் ஒருவர். கிஸ்மத், கும்பலங்கி நைட்ஸ், இஸ்க், வெயில் உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் ஷேன் நிகம் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

வெயில் படப்பிடிப்பின் போது சிகை அலங்காரத்தை மாற்றி சர்ச்சையில் சிக்கினார். மற்றொரு படப்பிடிப்பில் மது குடித்துவிட்டு போதையில் இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து மலையாள தயாரிப்பாளர்கள் சங்கமும், கேரள சினிமா தொழிலாளர்கள் சங்கமும் ஷேன் நிகாம் சினிமாவில் நடிக்க தடை விதித்தது.

banned,malayalam actor,removed,shane nigam, ,தடை, நீக்கம், மலையாள நடிகர், ஷேன் நிகம்

இதனால் அவர் நடிக்க வேண்டிய படங்களில் இருந்து நீக்கப்பட்டார். இதுபோல் மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியும் போதைப்பொருள் பயன்படுத்தி விட்டு படப்பிடிப்புக்கு வருவதாக புகார் கிளம்பிய நிலையில் அவருக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்துடன், மலையாள நடிகர் சங்கம் இந்த பிரச்சினை குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து ஷேன் நிகம் மீதான தடையை நீக்க தயாரிப்பாளர் சங்கம் முன் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|