Advertisement

ஐஎம்டிபி நடத்தும் 3 விழாக்களுக்கு மாமனிதன் திரைப்படம் தேர்வு

By: Nagaraj Fri, 02 Dec 2022 11:22:21 AM

ஐஎம்டிபி நடத்தும் 3 விழாக்களுக்கு மாமனிதன் திரைப்படம் தேர்வு

சென்னை: சர்வதேச திரைப்பட விழாக்களில் 40 விருதுகளை வென்றுள்ள மாமனிதன், ஐஎம்டிபி நடத்தும் 3 விழாக்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மாமனிதன்’. இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் முதன்முறையாக இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

3 festivals,international film festivals,40 seenuramasamy,directed by vijay sethupathi ,40 விருதுகள், வென்றுள்ளது, சீனுராமசாமி, இயக்கம், விஜய் சேதுபதி

யுவன்சங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்றது. படத்தைப் பார்த்த பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், சர்வதேச திரைப்பட விழாக்களில் 40 விருதுகளை வென்றுள்ள மாமனிதன், ஐஎம்டிபி நடத்தும் 3 விழாக்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags :