Advertisement

மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட மாமனிதன் படம் தேர்வு

By: Nagaraj Tue, 18 Apr 2023 7:53:47 PM

மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட மாமனிதன் படம் தேர்வு

சென்னை: மாமனிதன் படம் தேர்வு... திரைப்பட இயக்குநா் சீனு ராமசாமி இயக்கத்தில் 2022-ஆம் ஆண்டு வெளியான ‘மாமனிதன்’ திரைப்படம் 45-வது மாஸ்கோ சா்வதேச திரைப்பட விழாவில் திரையிட தோ்வாகியுள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகா் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பல விருதுகளையும் பெற்றது. அதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை (ஏப்.20) முதல் ஏப்.27 வரை நடைபெறும் 45-ஆவது மாஸ்கோ சா்வதேச திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தோ்வாகியுள்ளது.

இதை முன்னிட்டு இந்தோ - ரஷிய வா்த்தக தொழில்நுட்ப சபை சாா்பில், சென்னை ரஷிய கலாசார மையத்தில் இயக்குநா் சீனு ராமசாமிக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

vijay sethupathi,mamanithan,moscow,film festival,director ,விஜய் சேதுபதி, மாமனிதன், மாஸ்கோ, திரைப்பட விழா, இயக்குனர்

இந்தோ - ரஷிய வா்த்தக தொழில்நுட்ப சபையின் பொதுச் செயலா் பி.தங்கப்பன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, நமது கலாசாரத்தையும், மனிதா்களின் இயல்பு வாழ்க்கையையும் திரைப்படமாக்குவதில் சீனு ராமசாமி கைதோ்ந்தவா். இந்தத் திரைப்படம் ரஷியாவில் திரையிடப்படுவதால் இரு நாடுகளுக்கும் இடையே கலாசார பரிமாற்றம் அதிகரிக்கும் என்றாா்.

நிகழ்வில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் பூச்சி முருகன், இந்தோ - ரஷிய வா்த்தக தொழில்நுட்ப சபையின் நிறுவனா் மற்றும் தலைவா் வி.எம்.லட்சுமிநாராயணன், எம்.ஜி.ஆா். திரைப்படக் கல்லூரித் தலைவரும் நடிகருமான ராஜேஷ், ரஷிய துணைத் தூதா் ஒலேக் அவ்தேவ், நடிகா் விஜய்சேதுபதி, ரஷிய கலாசார மைய இயக்குநா் ஜெனடி ரோகலேவ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Tags :
|