Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ‘மாமன்னன்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடம்

‘மாமன்னன்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடம்

By: vaithegi Sun, 30 July 2023 4:17:04 PM

‘மாமன்னன்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடம்

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்த திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

இதையடுத்து இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த திரைப்படம்.

mamannan,netflix ,மாமன்னன்,நெட்ஃப்ளிக்ஸ்


கட்சிக்குள் இருக்கும் சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை அழுத்தமாக சொன்ன திரைப்படம். பரவலான பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தத் திரைப்படம் இதுவரை மட்டும் சுமார் 62 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது.

கடந்த 27-ம் தேதி இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. இந்த நிலையில் இப்படம் வெளியானது முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் இன்று வெளியிட்டு உள்ள பட்டியலிலும் ‘மாமன்னன்’ முதலிடத்திலும், ஜாக்கிசானின் ‘ஹிட்டன் ஸ்ட்ரைக்’ 2வது இடத்திலும், அனிமேஷன் படமான ‘லேடிபக் கேட் நோய்ர்’ 3வது இடத்திலும் உள்ளன.


Tags :