Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் மாமன்னன் படம்: படக்குழுவினர் கொண்டாட்டம்

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் மாமன்னன் படம்: படக்குழுவினர் கொண்டாட்டம்

By: Nagaraj Sat, 01 July 2023 9:09:54 PM

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் மாமன்னன் படம்: படக்குழுவினர் கொண்டாட்டம்

சென்னை: ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் மாமன்னன் படத்தால் படக்குழுவினர் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மாமன்னன்'. இப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மேலும் படிக்க உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

father-in-law,photography,film crew,cake cutter,celebration ,மாமன்னன், புகைப்படம், படக்குழு, கேக் வெட்டினர், கொண்டாட்டம்

இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், 'மாமன்னன்' படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags :