Advertisement

‘மாமன்னன்’ திரைப்படம் OTT-ல் வெளியாகிற தேதி வெளியீடு

By: vaithegi Thu, 20 July 2023 10:42:53 AM

‘மாமன்னன்’ திரைப்படம் OTT-ல் வெளியாகிற தேதி வெளியீடு

மாரி செல்வராஜ் இயக்கிய அரசியல் த்ரில்லர் திரைப்படமான ‘மாமன்னன்’ படம் வருகிற ஜூலை 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியிடப்படவுள்ளது.

கடந்த ஜூன் 29 அன்று திரைக்கு வந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுது.

ott,mamannan ,OTT,மாமன்னன்

வைகைப்புயல் வடிவேலுவை இதுவரை இல்லாத ஒரு தீவிர கதாபாத்திரத்தில் காட்டி அவருக்கு எதிராக ஃபஹத் பாசிலை நடிக்க வைத்து உள்ளதால் மாமன்னன் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர், இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து உள்ளார்.

Tags :
|