- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் மணிகண்டா ராஜேஷ் வெளியேற்றம்?
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் மணிகண்டா ராஜேஷ் வெளியேற்றம்?
By: Nagaraj Fri, 30 Dec 2022 11:45:10 PM
சென்னை: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து மணிகண்டா வெளியேறுகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிக்பாஸ் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 6 சீசன்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. 6வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கி இப்போது முடிவுக்கும் வரப்போகிறது. இப்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்த வண்ணம் இருக்கிறது.
அவர்கள் வந்த எபிசோட் எல்லாம் சூப்பராக இருந்தது, ரசிகர்களும்
ரசித்தார்கள். இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டில் அசீம், விக்ரமன், ஷிவின்,
கதிரவன், மைனா, அமுதவாணன், ஏடிகே, மணிகண்டா எலிமினேஷனுக்கு நாமினேட்
ஆனார்கள். தற்போது என்ன விவரம் என்றால் இந்த வாரம் வீட்டில் இருந்து
மணிகண்டா ராஜேஷ் வெளியேறி இருக்கிறாராம்.
இதனால்
ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கமல் சொல்வதை போல்
எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என்பது பிக்பாஸை பொறுத்த வரை உண்மைதான்
போலிருக்கிறது.