- வீடு›
- பொழுதுபோக்கு›
- தமன்னா வெளியிட்ட ஜெயிலர் இசை வெளியீட்டு புகைப்படங்களுக்கு 10 லட்சம் லைக்குகள்
தமன்னா வெளியிட்ட ஜெயிலர் இசை வெளியீட்டு புகைப்படங்களுக்கு 10 லட்சம் லைக்குகள்
By: Nagaraj Sun, 30 July 2023 9:17:20 PM
சென்னை: தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்களை பதிவிட்ட புதிய புகைப்படங்கள் 19 மணி நேரத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமாக லைக்குகள் பெற்று வைரல் ஆகியுள்ளது.
தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். தற்போது போலா ஷங்கர், ஜெயிலர் ஆகிய படங்கள் வெளிவர உள்ளது.
சமீபத்தில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரிஸ்2' தொடரில் தமன்னாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டானது. மேலும் அதில் நடித்த விஜய் வர்மாவுடன் டேட்டிங்கில் இருப்பதை சமீபத்தில் உறுதியும் செய்தார்.
காவாலா பாடல் யூடியூபில் 8.4 கோடி (84மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் தமன்னாவின் நடனமும் அனிருத்தின் இசையுமென ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஜூலை 28இல் சென்னையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது ஜெயிலர் இசை வெளியீட்டு விழா.
இந்நிலையில், தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்களை பதிவிட்ட புதிய புகைப்படங்கள் 19 மணி நேரத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமாக லைக்குகள் பெற்று வைரல் ஆகியுள்ளது.