Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • உடல் உருவ கேலி செய்தவர்களுக்கு பதிலடியாக ஒரு புகைப்படம் வெளியிட்ட மஞ்சிமா மோகன்

உடல் உருவ கேலி செய்தவர்களுக்கு பதிலடியாக ஒரு புகைப்படம் வெளியிட்ட மஞ்சிமா மோகன்

By: Nagaraj Tue, 29 Aug 2023 10:13:37 PM

உடல் உருவ கேலி செய்தவர்களுக்கு பதிலடியாக ஒரு புகைப்படம் வெளியிட்ட மஞ்சிமா மோகன்

சென்னை: உடல் உருவத்தை வைத்து கேலி செய்தவர்களுக்கு தக்க பதிலடியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை மஞ்சிமா மோகன்.

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

மஞ்சிமா மோகன் கடந்த 2022 -ம் ஆண்டு நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தின் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

actress manjima mohan,body weight,shared,response ,நடிகை மஞ்சிமா மோகன், உடல் எடை, பகிர்ந்துள்ளார், பதிலடி

அந்த சமயத்தில் மஞ்சிமா மோகன் உடல் எடை அதிகமாக இருந்ததால் சிலர் அவரை கிண்டல் செய்தனர். இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத மஞ்சிமா மோகன் தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டார்.

இந்நிலையில் ஓணம் பண்டிகை முன்னிட்டு சேலையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தன்னை குண்டு என்று கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த புகைப்படம் அமைந்திருக்கிறது. உடல் எடை குறைந்து காணப்படுகிறார் நடிகை மஞ்சிமா மோகன்.

Tags :
|