Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் விஜய்யை சந்தித்த மார்க் ஆண்டனி படக்குழுவினர்... படங்கள் செம வைரல்

நடிகர் விஜய்யை சந்தித்த மார்க் ஆண்டனி படக்குழுவினர்... படங்கள் செம வைரல்

By: Nagaraj Thu, 27 Apr 2023 8:46:02 PM

நடிகர் விஜய்யை சந்தித்த மார்க் ஆண்டனி படக்குழுவினர்... படங்கள் செம வைரல்

சென்னை: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படங்கள்... நடிகர் விஜய்யை மார்க் ஆண்டனி படக்குழுவினருடன் விஷால் சந்தித்த புகைப்படங்கள் டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார், இயக்குநர் உள்ளிட்டோருடன் விஜய்யை சந்தித்த விஷால் படத்தின் டீசரை காண்பித்துள்ளார்.

actor vijay,mark antony,pathan movie,trailer,twitter ,நடிகர் விஜய், மார்க் ஆண்டனி, பதான் படம், ட்ரைலர், ட்விட்டர்

இதுகுறித்த தகவலை புகைப்படத்துடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ள விஷால், அன்பு அண்ணன் நடிகர் விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி. எனது படத்தின் டீசரை பார்த்ததற்கு மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். மேலும், ‘தளபதி விஜய்ஃபார் மார்க் ஆண்டனி’ என்ற ஹேஷ்டேக்கையும் தொடங்கி வைத்துள்ளார்.

இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் டீசரை நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஷாருக்கானின் பதான் படத்தின் டிரைலரை, நடிகர் விஜய் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :