Advertisement

‘மார்க் ஆண்டனி’ ஓடிடியில் வெளியாகும் தேதி வெளியீடு

By: vaithegi Wed, 11 Oct 2023 10:07:15 AM

‘மார்க் ஆண்டனி’ ஓடிடியில் வெளியாகும் தேதி வெளியீடு

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, அபிநயா, ரிது வர்மா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “மார்க் ஆண்டனி “. இஹந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது.

மார்க் ஆண்டனி திரைப்படம் வருகிற செப்டம்பர் 13 அன்று அமேசான் பிரேம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் பெரும் உற்சாகத்துடன் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ott,mark antony ,ஓடிடி,மார்க் ஆண்டனி

இதனையடுத்து படம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது. படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரேம் வாங்கியுள்ள நிலையில், வருகிற படம் 13-ஆம் தேதி வெளியாகிறது.

அதைப்போன்று படத்தின் சாட்டிலைட் (தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை) யை ஜீ தொலைக்காட்சி வாங்கியுள்ளது. விரைவில் நல்ல நாள் அன்று அதிலும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|