Advertisement

மார்க் ஆண்டனி படம் உலகம் முழுவதும் ரூ.73 கோடி வசூல் வேட்டை

By: Nagaraj Sat, 23 Sept 2023 12:55:01 PM

மார்க் ஆண்டனி படம் உலகம் முழுவதும் ரூ.73 கோடி வசூல் வேட்டை

சென்னை: மார்க் ஆண்டனி படம் உலகம் முழுவதும் படம் ரூ. 73 கோடி மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா படங்கள் தோல்வியை தழுவி இருந்தாலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நம்பிக்கையுடன் இயக்கிய திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. அவரது நம்பிக்கையை பொய்யாக்காமல் வசூலில் வேட்டையாடி வருகிறது.

விஷால், எஸ்.ஜே.சூர்யா என பலர் நடித்துள்ள இத்திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

collection,mark antony,around the world,film crew ,வசூல்வேட்டை, மார்க் ஆண்டனி, உலகம் முழுவதும், படக்குழு

படக்குழுவும் படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியுள்ளனர். ரூ. 60 கோடி பட்ஜெட்டில் மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.

கடந்த 15 தேதி திரைக்கு வந்த மார்க் ஆண்டனி 4 நாட்களில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி இருந்தது. நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்து வர இதுவரை உலகம் முழுவதும் படம் ரூ. 73 கோடி மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

Tags :