- வீடு›
- பொழுதுபோக்கு›
- 13 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்தார்... காதல் நினைவலைகள் குறித்து ரோஜா நெகிழ்ச்சி
13 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்தார்... காதல் நினைவலைகள் குறித்து ரோஜா நெகிழ்ச்சி
By: Nagaraj Sun, 16 Oct 2022 09:42:03 AM
ஐதராபாத்: இருவரது சாதியும் வேறு வேறு என்றாலும் 13 ஆண்டுகள் செல்வா எனக்காக காத்திருந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் என்று தனது காதல் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை ரோஜா.
தமிழ் சினிமாவில் 90 களில் ரசிகர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரோஜா. ரஜினி,பிரபுதேவா, அஜித், போன்ற முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்தவர். தமிழ்,தெலுங்கு என்று பல இயக்குனர்களுடன் பணியாற்றினாலும் இயக்குநர் செல்வமணியை காதலித்து வந்தார்.
ரோஜா முன்னணி நடிகையாக வலம் வந்தபோது, இயக்குநர் செல்வமணியின்
திரைப்படங்கள் குறைய தொடங்கியது ஆனால் அப்போதும் காதலித்து வந்தார் ரோஜா.
இவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததும் பலர் மார்கெட் இல்லாத ஒரு
இயக்குனரை திருமணம் செய்து கொள்வது சரியவாராது என்று அவர் மனதை
குழப்பினார்கள்.
ஆனால் தனது காதலில் ரோஜா உறுதியாக நின்றார்.
இருவரது சாதியும் வேறு வேறு என்றாலும் 13 ஆண்டுகள் செல்வா எனக்காக
காத்திருந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் என்று ஒரு
பேட்டியில் தனது காதல் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ரோஜா.