Advertisement

மாஸ், கிளாஸ், ஆக்சன்... தெறிக்க விடும் மாஸ்டர் டீசர்!

By: Monisha Sun, 15 Nov 2020 4:43:53 PM

மாஸ், கிளாஸ், ஆக்சன்... தெறிக்க விடும் மாஸ்டர் டீசர்!

நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் தீபாவளி தினமான நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகியது. வெளியான சில மணி நேரத்திலேயே மாஸ்டர் டீசர் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு ஏற்றதுபோல் மாஸ், கிளாஸ், ஆக்சன் என அனைத்தும் கலந்து இந்த டிசர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டீசரில், "எனக்கு தெரியும் சார் ஜேடி இஸ் த கல்பிரிட்
வாத்திக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்துச்சு
ஃபிரியா விடு அவன் ஒரு போதை டைப்

mass,class,action,master,teaser ,மாஸ்,கிளாஸ்,ஆக்சன்,மாஸ்டர்,டீசர்

என்று ஆரம்பத்தில் வரும் மூன்று வசனங்களில் இருந்தே ஏற்கனவே நாம யூகித்தபடி 'மாஸ்டர்' விஜய் கேரக்டர் ஒரு போதை பழக்கமுள்ள புரபொசர் என்பது உறுதியாகிறது. அதேபோல் 'அந்த வாத்தி ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கான்' என்ற ஒரு வசனத்தில் இருந்தே விஜய்சேதுபதியின் வில்லன் கேரக்டர் எந்தளவு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு நிமிடம் 30 வினாடிகள் டீசரில் விஜய் மற்றும் விஜய்சேதுபதியின் மாஸ் காட்சிகளை பார்க்கும்போதே தெறிக்க வைக்கின்றது. மாளவிகா மோகனின் ஒருசில காட்சிகள், அர்ஜூன் தாஸ், சாந்தனுவின் ஒரே காட்சி ஆகியவை அவர்களுடைய கதாபாத்திரத்தை உறுதி செய்கின்றன. ரெயில் சண்டை ஆக்சன் பிரியர்களுக்கான சரியான விருந்தாக இருக்கும். விஜய், விஜய்சேதுபதி மோதும் காட்சியுடன் டீசர் முடிவடைவது படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய உயரத்தில் விட்டு சென்றுள்ளது. அதேபோல் டீஸர் முழுவதும் அனிருத்தின் இசை ராஜ்ஜியம் தெரிகிறது. மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் விருந்தை படைத்திருக்கின்றார் லோகேஷ் கனகராஜ்.

Tags :
|
|
|
|