Advertisement

புதிய படத்தில் நிஹாரிகா இடத்தை பிடித்த மேகா ஆகாஷ்!

By: Monisha Thu, 10 Sept 2020 1:01:21 PM

புதிய படத்தில் நிஹாரிகா இடத்தை பிடித்த மேகா ஆகாஷ்!

திருமணம் காரணமாக ஒப்பந்தமாகி இருந்த படத்தில் இருந்து நடிகை நிஹாரிகா விலகியதை அடுத்து அந்த படத்தின் வாய்ப்பை நடிகை மேகா ஆகாஷ் கைப்பற்றி உள்ளார்.

இயக்குனர் சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்த ஸ்வாதினி என்பவர் இயக்கும் முதல் படத்தில் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க நிஹாரிகா என்ற நடிகை ஒப்பந்தமாகியிருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது வரும் அக்டோபரில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஆனால் டிசம்பரில் நிஹாரிகாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

director,swadini,actor ashok selvan,niharika,mega akash ,இயக்குனர்,ஸ்வாதினி,நடிகர் அசோக் செல்வன்,நிஹாரிகா,மேகா ஆகாஷ்

இதனை அடுத்து இந்த படத்தில் தற்போது மேகா ஆகாஷ் இணைந்துள்ளார். இந்த படம் ஒரு போட்டோகிராபருக்கும் நடனக்கலைஞருக்கும் இடையே நடக்கும் காமெடி கலந்த ரொமான்ஸ் கதையம்சம் கொண்டது என்று இயக்குனர் ஸ்வாதினி தெரிவித்துள்ளார்

அக்டோபர் 27-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் அசோக் செல்வன் மற்றும் மேகா ஆகாஷ் இடையேயான கெமிஸ்ட்ரி இந்த படத்தில் நல்ல முறையில் ஒர்க் அவுட் ஆகும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் இயக்குனர் ஸ்வாதினி தெரிவித்துள்ளார்.

Tags :