Advertisement

மைக்கேல் படத்தின் டீசர் வெளியானது... ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Mon, 24 Oct 2022 9:47:25 PM

மைக்கேல் படத்தின் டீசர் வெளியானது... ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: , தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராக உள்ள ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் ஆகிய படங்களை இயக்கி புகழ் பெற்றவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. தற்போது அவர் இயக்கியுள்ள படம் ‘மைக்கேல்’. இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ளனர்.

கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். மேலும் திவ்யன்ஷா கௌசிக், வரலக்ஷ்மி சரத்குமார், வருண் சந்தேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி இணைந்து தயாரித்துள்ளது.

directing films,divyansha,famous,ranjith jayakodi ,இதய ராணியும், இஸ்பேட் ராஜாவும், புரியாத புதிர், ரஞ்சித் ஜெயக்கொடி.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராக உள்ள ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


இப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.பசியில இருக்குற மிருகத்துக்கு வேட்டை தெரியணும்ங்குற அவசியமில்ல என்ற வசனங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|