- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போவது மகிழ் திருமேனிதானாம்
நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போவது மகிழ் திருமேனிதானாம்
By: Nagaraj Wed, 08 Feb 2023 11:18:18 PM
சென்னை: நடிகர் அஜித் குமார், துணிவு படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து, தனது 62ஆவது படத்தில் நடிக்க ஆயுத்தமாகி வருகிறார். தற்போது அவர் போர்ச்சுகல் போன்ற ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவரின் 62வது படம் குறித்த தகவல்கள் அனலை பரப்பிக் கொண்டு இருக்கிறது.
AK62 என்ற அழைக்கப்பட்ட அந்த படத்தை லைகா தயாரிப்பதாகவும், விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் இருந்தது. தற்போது, சில காரணங்களுக்காக விக்னேஷ் சிவன் அந்த படத்தை இயக்கவில்லை எனத் தெரிகறது. அவரின் படத்தை அஜித் தரப்பு தள்ளிவைத்திருப்பதாகவும், வேறு கதையில் நடிக்க இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டிருந்த AK62 என்ற வார்த்தையையும், ட்விட்டர் கவர் போட்டோவாக வைத்திருந்த அஜித் படத்தையும் சமீபத்தில் நீக்கினார்.
அதனால் அஜித்தின் அடுத்தப்படத்தை அட்லி, விஷ்ணுவர்தன் என பல இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டாலும், மகிழ் திருமேனி AK62 படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. மகிழ் திருமேனி லண்டன் சென்று லைகா தயாரிப்பு நிறுவனத்திடம் கதையை ஒப்புதல் பெற்றதாகவும், அஜித்தும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.