Advertisement

வாரிசு படம் குறித்து எம்எல்ஏ ஜெ.கருணாநிதியின் பதிவு செம வைரல்

By: Nagaraj Fri, 20 Jan 2023 10:59:41 PM

வாரிசு படம் குறித்து எம்எல்ஏ ஜெ.கருணாநிதியின் பதிவு செம வைரல்

சென்னை: குடும்பத்தை கொண்டாடும் வகையில் அருமையான படைப்பை வழங்கிய விஜய்க்கு பாராட்டுக்கள் என்று எம்எல்ஏ ஜெ.கருணாநிதியின் பதிவு செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். கடந்த 11ஆம் தேதி வெளியான வாரிசு சில இடங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வம்சி இயக்கிய இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் யோகி பாபு, பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

actor vijay,appreciation,mla , எம்.எல்.ஏ, நடிகர் விஜய், பாராட்டு

படம் குறித்த விமர்சனங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகி வரும் நிலையில், ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ.வின் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


இளையதளபதி விஜய்யின் படங்களை ரிலீஸ் ஆன முதல் நாளே பார்ப்பேன். வாரிசு குடும்பக் கதையாக வெளியானதால் சில நாட்கள் கழித்து குடும்பத்துடன் பார்த்தேன்.


குடும்பத்தை கொண்டாடும் வகையில் அருமையான படைப்பை வழங்கிய விஜய்க்கு பாராட்டுக்கள். என்று பதிவிட்டுள்ளார். அவரது பாராட்டுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்து இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Tags :