Advertisement

”தனி ஒருவன் 2″ குறித்து மோகன் ராஜா கொடுத்த அப்டேட்

By: vaithegi Fri, 03 Mar 2023 8:25:59 PM

”தனி ஒருவன் 2″ குறித்து மோகன் ராஜா கொடுத்த அப்டேட்

இயக்குனர் 2015-ம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி , அரவிந்த்சாமி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “தனி ஒருவன்”. படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழன் இசையமைத்திருந்தார்.

இதையடுத்து இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிக்பெரியை வெற்றியை பெற்றது. ஜெயம் ரவிக்கும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படமாக திகழ்ந்தது. 1 பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 2-வது பாகம் உருவாகுமா என்று ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

update,mohan raja ,அப்டேட் ,மோகன் ராஜா

இந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் மோகன் ராஜா தனி ஒருவன் 2 குறித்து பேசியுள்ளார். இது பற்றிய பேசிய அவர் ” என்னுடைய தம்பி ஜெயம் ரவியும் நானும் இப்போது பல்வேறு படங்களின் வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறோம். இருவருக்கும் நேரம் கிடைக்கும்போது தனி ஒருவன் 2 ” தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் மார்ச் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Tags :
|