Advertisement

மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாகிறது!

By: Monisha Mon, 05 Oct 2020 6:49:48 PM

மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாகிறது!

நயன்தாரா நடிப்பில் உருவாகிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி அன்று ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகிய 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்த ஆர்ஜே பாலாஜியின் டுவிட் ஒன்று குறித்த செய்தியைப் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஹாட்ஸ்டார் ஓடிடியில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

nayanthara,rj balaji,mookkuthi amman,hotstar ,நயன்தாரா,ஆர்ஜே பாலாஜி,மூக்குத்தி அம்மன்,ஹாட்ஸ்டார்

மேலும் இந்த திரைப்படம் ஹாட்ஸ்டாரில் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டு போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வரும் தீபாவளி அன்று மூக்குத்தி அம்மனின் தரிசனம் ஓடிடி மூலம் ரசிகர்களின் வீட்டிற்கே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஸ்ருமிதி வெங்கட், ஊர்வசி, அஜய் ஜோஷ், இந்துஜா ரவிச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

Tags :