- வீடு›
- பொழுதுபோக்கு›
- லியோ படத்தில் அதிக கெட்ட வார்த்தைகள்... சென்சார் கட்? தயாரிப்பாளர் மறுப்பு
லியோ படத்தில் அதிக கெட்ட வார்த்தைகள்... சென்சார் கட்? தயாரிப்பாளர் மறுப்பு
By: Nagaraj Fri, 06 Oct 2023 2:02:46 PM
சென்னை: லியோ படத்தின் சென்சார் குறித்து வெளிவந்துள்ள விஷயங்கள் பொய். அது உண்மையில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் லலித் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். நேற்று லியோ படத்தின் சென்சார் நடைபெற்று முடிந்துள்ளது. U/A சான்றிதழ் லியோ படத்திற்கு கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேலும் தற்போது லியோ படத்தில் இருந்து சென்சார் போர்டு வெட்டி தூக்கிய விஷயங்கள் என்னென்ன குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் கெட்ட வார்த்தைகள் உள்ள பல காட்சிகளை ம்யூட் செய்துள்ளனர். சில கெட்ட வார்த்தைகளை வெட்டி தூக்கியுள்ளனர்.
இதுவரை எந்த ஒரு விஜய் படத்திலும் வாராத அளவிற்கு இப்படத்தில் அதிக கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். மேலும் ISRO என பெயர் வரும் இடங்களில் GIRO என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உடை இல்லாமல் எரிந்துகிடக்கும் சிறுவன் அல்லது சிறுமியின் காட்சியை 20% சதவீதம் குறைத்துள்ளார்களாம். இவை தான் லியோ படத்திலிருந்து சென்சார் போர்டு தூக்கியுள்ள காட்சிகள் என்று தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இந்த சென்சார் குறித்து வெளிவந்துள்ள விஷயங்கள் போய், உண்மையில்லை படத்தின் தயாரிப்பாளர் லலித் உறுதி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.