Advertisement

சித்தார்த்துடன் காதல்... அது வதந்தி என்று அதிதி ராவ் மறுப்பு

By: Nagaraj Sun, 05 Mar 2023 2:01:14 PM

சித்தார்த்துடன் காதல்... அது வதந்தி என்று அதிதி ராவ் மறுப்பு

சென்னை: சித்தார்த் உடனான தன் காதல் வதந்திக்கு அதிதி ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவர் சமீபத்தில், தான் திரைத்துறையை விட்டு விலக இருப்பதாகவும் இனி படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு தொழிலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

actor siddharth,actress aditi rao,love, ,காதல், நடிகர் சித்தார்த், நடிகை அதிதிராவ்

இந்நிலையில், சில தினங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர்.

இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது. சமீபத்தில், நடிகர் சித்தார்த்துடன் இணைந்து விஷாலின் எனிமி படத்தில் இடம்பெற்ற மாலை டம் டம் பாடலுக்கு நடிகை அதிதி ராவ் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், சித்தார்த் உடனான தன் காதல் வதந்திக்கு அதிதி ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Tags :
|