Advertisement

நினைவெல்லாம் நீயடா திரைப்பட்டத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

By: Nagaraj Thu, 19 Jan 2023 12:38:59 PM

நினைவெல்லாம் நீயடா திரைப்பட்டத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

சென்னை: இளையராஜாவின் 1,417 வது படமாக உருவாகி வருகிறது ‘நினைவெல்லாம் நீயடா’ திரைப்படம். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில், ராயல் பாபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக் கதை, வசனங்களை எழுதி இயக்கி வருகிறார். பிரஜன் கதாநாயகனாக நடிக்க, மனிஷா யாதவ் மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இளம் நாயகன் நாயகியாக ரோஹித் - யுவலட்சுமி ஜோடி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி.எல்.தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

musician,film,5 songs,motion poster,director ,இசைஞானி, படம், 5 பாடல்கள், மோஷன் போஸ்டனர், இயக்குனர்

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை, கௌதம் வாசுதேவன் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். "இந்தப் படத்திற்காக அசத்தலான ஐந்து பாடல்களை உருவாக்கித் தந்திருக்கிறார் இசைஞானி.

ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பைக் கவனித்திருக்கிறார். முனிகிருஷ்ணன் கலை அமைக்க, சண்டைக் காட்சிகளை பிரதீப் தினேஷ் உருவாக்கியிருக்கிறார். நடனக் காட்சிகளை தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்கள் வடிவமைத்திருக்கின்றனர்.

Tags :
|