Advertisement

மயக்கும் இசையால் மனங்களை கவர்ந்த இசைஞானி இளையராஜா

By: Nagaraj Fri, 02 June 2023 11:13:22 AM

மயக்கும் இசையால் மனங்களை கவர்ந்த இசைஞானி இளையராஜா

சென்னை: மயக்கும் இசையால் நம்மை கவர்ந்த இசைஞானி இளையாராஜாவுக்கு இன்று பிறந்தநாள். ஒவ்வொரு நாளையும் இசையுடன் வாழ்ந்து வரும் இளையராஜாவை இசை தான் எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது எனலாம்.

மனதை மயக்கும் மெலோடி பாடல்கள் முதல் ஆட்டம் போட வைக்கும் பெப்பி பாடல்கள் வரை இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்கின்றன. உதவியாளராக இருந்தது முதல் இசைஞானியாக மாறியது வரை இளையராஜா பற்றி பலருக்கும் தெரியாத சில தகவல்கள் பற்றி பார்ப்போம்.

இளையராஜா அவரது அண்ணன் பாவலர் வரதராஜனுக்கு உதவியாளராக பணியாற்றியுள்ளார். அவர் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இசை கச்சேரிக்கு செல்லும் போது அவருக்கு உதவியாக அம்மா இளையராஜாவையும் அனுப்பி வைத்தார். அண்ணனை ஊக்குவிக்கும் வகையில் அவர் பாடல்களை பாடுவார். அவரது வழிகாட்டுதலில் தான் தனது இசை பயணத்தை துவங்கினார் இளையராஜா.

ஆரம்ப காலத்தில் இளையராஜா பொன்மலை மற்றும் திருவெறும்பூர் ஆகிய இடங்களில் நடத்திய இசை கச்சேரிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இளையராஜாவுக்கு மறக்க முடியாத நினைவுகளை கொடுத்தவை அவை. தற்போதும் அவரது பேவரைட் அதுவாகத்தான் இருக்கும்.

ilayaraja,composers,music notes,faith in god ,இளையராஜா, இசையமைப்பாளர்கள், இசை குறிப்புகள், கடவுள் நம்பிக்கை

இளையராஜா தனது சொந்த சகோதரியின் மகளான ஜீவா ராஜய்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா என இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இளையராஜா போலவே அவர்களும் இசை துறையில் தான் இருக்கின்றனர்.

இளையராஜா கிறிஸ்தவராக பிறந்தவர். அதன் பிறகும் ஹிந்துவாக மதம் மாறினார். அவரது மகன் யுவன் ஷங்கர்ர் ராஜா சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாமியராக மதம் மாறினார். இளையராஜாவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ரமணா மகரிஷி மற்றும் தாய் மூகாம்பிகையை வழிபடுவார் அவர்.

ஒரு சில இசையமைப்பாளர்கள் மட்டுமே இசை குறிப்புகள் எழுதி அதன் பின்பு அதை வாசிப்பார்கள். அதில் இளையராஜாவும் ஒருவர். அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா கூட அப்படி செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையை பயன்படுத்தி தான் இவ்வளவு பாடல்களை கொடுத்துள்ளார் இளையராஜா.

Tags :