Advertisement

மட்டன் கீமா, குலோப்ஜாமூன் விஜய்க்கு ரொம்ப பிடித்த உணவுகள்

By: Nagaraj Mon, 31 Oct 2022 7:31:51 PM

மட்டன் கீமா, குலோப்ஜாமூன் விஜய்க்கு ரொம்ப பிடித்த உணவுகள்

சென்னை: மட்டன் கீமா, குலாப் ஜாமுன், பிரியாணி இதுதான் விஜய்க்கு பிடித்த மூன்று உணவு இதுதான் என்று நடிகர் சஞ்சீவ் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வாரிசு தற்போது உருவாகி வருகிறது. இப்படம் வருகிற 2023 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்து விட்டனர்.

sanjeev,actor vijay,favorite foods,mutton keema,info ,சஞ்சீவ்,  நடிகர் விஜய், பிடித்த உணவுகள், மட்டன் கீமா, தகவல்

வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்க்கு பிடித்த மூன்று உணவுகள் குறித்து பிரபல நடிகர் சஞ்சீவின் மனைவியும், சீரியல் நடிகையுமான பிரீத்தி சஞ்சீவ் கூறியுள்ளார். விஜய்க்கு மிகவும் பிடித்தது, மட்டன் கீமா, குலாப் ஜாமுன், பிரியாணி என இந்த மூன்று உணவுகளும் பிடிக்குமாம். விஜய் மற்றும் சஞ்சீவ் கல்லூரியில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :