Advertisement

என்னது நடிகை நயன்தாரா சினிமாவை விட்டு விலகால?

By: vaithegi Sat, 25 Feb 2023 11:11:45 AM

என்னது நடிகை நயன்தாரா சினிமாவை விட்டு விலகால?

விரைவில் விலக இருப்பதாகவே தகவல் .... கடந்த வருடம் அக்டோபரில் வாடகைத்தாய் மூலம் நயன்தாரா 2 குழந்தைகள் பெற்றுக்கொண்டார். அந்த குழந்தைகளை அருகில் இருந்து கவனித்துக் கொள்வற்காக சினிமாவுக்கு முழுக்கு போடும் முடிவை அவர் எடுத்து இருக்கிறாராம். தற்போது இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து கொண்டு வருகிறார். பெயரிடப்படாத தனது 75-வது படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் இறைவன் உள்பட மேலும் 2 படங்களும் கைவசம் உள்ளன. இப்படங்களை விரைவாக முடித்து கொடுத்துவிட்டு சினிமாவை விட்டு விலகப்போகிறார் எனவும், நடிப்பதை நிறுத்தினாலும் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து படங்கள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவார் எனவும் கூறப்படுகிறது.

cinema,nayanthara ,சினிமா,நயன்தாரா

ஆனாலும் நயன்தாரா தரப்பில் இதை உறுதிப்படுத்தவில்லை. கேரளாவை சேர்ந்த நயன்தாரா 2005-ல் ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறக்கிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். இப்படங்கள் முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூல் குவித்து திரையுலகினரை பெரும் ஆச்சரியப்படுத்தின. அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் 1 இடத்தில் இருக்கிறார்.

Tags :
|