Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சந்திரமுகி 2 படகுழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள் ..ரஜினிகாந்த்

சந்திரமுகி 2 படகுழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள் ..ரஜினிகாந்த்

By: vaithegi Sat, 30 Sept 2023 10:09:42 AM

சந்திரமுகி 2 படகுழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்  ..ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு என்று பலர் நடித்து கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் ‘சந்திரமுகி’ இப்படம் அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் கிட்டதட்ட 18 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் 2-ம் பாகத்தை முதல் பாகத்தின் இயக்குநரான பி. வாசு இயக்கியுள்ளார்.

ராகவாலாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகி குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.7.5 கோடியை வசூலித்து உள்ளது. தமிழகத்தில் இத்திரைப்படம் ரூ.4.5 கோடி வசூலித்துள்ளது.

rajinikanth,best wishes,chandramukhi 2,crew ,ரஜினிகாந்த் ,நல்வாழ்த்துக்கள்  ,சந்திரமுகி 2,படகுழுவினர்  ,

இந்நிலையில், படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மிகப்பெரிய வெற்றி படமான தன்னுடைய சந்திரமுகியை..

புதிதாக, வேறு ஒரு கோணத்தில், ஒரு பிரம்மாண்ட பொழுதுபோக்குப் படமாக, சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர் திரு. வாசு அவர்களுக்கும், அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும்.. மற்றும் படகுழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :