Advertisement

நாக சைதன்யாவின் கஸ்டடி வசூல் டல்? சினிமா வட்டாரத்தில் தகவல்

By: Nagaraj Sat, 13 May 2023 3:19:26 PM

நாக சைதன்யாவின் கஸ்டடி வசூல் டல்? சினிமா வட்டாரத்தில் தகவல்

ஐதராபாத்: முதல் நாள் வசூல் டல்?... நாக சைதன்யா தெலுங்கு சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது முதன்முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி என்ற படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகியுள்ள இப்படம் நேற்று மே 12 வெளியாகி இருந்தது. மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்திற்கு மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

collection,loss,first day,custody,cinema locals ,வசூல், நஷ்டம், முதல்நாள், கஸ்டடி, சினிமா வட்டாரத்தினர்

படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் கஸ்டடி படம் முதல் நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 5 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல் நாளே படத்தின் வசூல் நஷ்டத்துடன் ஆரம்பித்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் வசூல் அதிகரிக்கும் என்று சினிமா வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

Tags :
|